சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Update: 2023-12-28 07:24 GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஷாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம் திருநாளை முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக உற்சவர் நடராஜபெருமான் ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஶ்ரீ மாணிக்கவாசகர் சுவாமி ஆகியோர் எழுந்தருள செய்து திருமஞ்சன பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர் மாலைகள் கொண்டு சர்வ அலங்காரம் நடைபெற்று, கோமாதா பூஜை நடந்தன. பின்னர் மகா தீபாரதனை காண்பித்து உற்சவ தெய்வங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க கோடி தீபம், கும்ப தீபம், நாகதீபம் மற்றும் பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜபெருமானை வழிபட்டனர்.