தேவபாண்டலம் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது;
Update: 2023-12-28 07:53 GMT
ஆருத்ரா தரிசனம்
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜர் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதையொட்டி ஆனந்த நடராஜருக்கு பால்,தயிர்,இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. மகாதீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முன்னாள் ரோட்டரி தலைவர் சந்திரசேகர் செய்திருந்தார். திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதே போல் சங்கராபுரம் சங்கராலிங்கேஸ்வரவர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சங்கரலிங்கேஸ்வரர், மணிமங்கள நாயகி ஆகிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.