அருண் நேரு தேர்தல் பரப்புரை

தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாப்படும் என அருண் நேரு தெரிவித்தார்.

Update: 2024-03-25 11:37 GMT

பரப்புரை 

திமுக மற்றும் தோழமை கூட்டணி கட்சிகளின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு போட்டியிடுகிறார். மேலும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் புள்ளம்பாடி அருகே முதுவத்தூர் மேலரசூர் பகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பேசி பொதுமக்கள் இளைஞரிடம் வீதி,வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். மேலும் வேட்பாளர் அருண்நேருவிற்க்கு அவரது தந்தையான நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த தேர்தல் பரப்புரையின் போது லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் புள்ளம்பாடி ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்தல் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News