குமரியில் பிரச்சாரத்தை தொடங்காமல் மெளனம் !
சட்டசபை இடை தேர்தலுக்கும் வேட்பாளர்கள் யார் என தெரியாததால் அரசியல் கட்சிகளின் இன்னும் பிரச்சாரத்தை தொடங்காமல் மெளனமாக உள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-21 04:49 GMT
நாடாளுமன்ற பொது தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தொகுதியாகவும், கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள தொகுதியாக இருந்து வருகிறது. இங்கு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸ் கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் இந்த தொகுதி பாரதிய ஜனதா களமிறங்க இருக்கிறது. அதிமுக கூட்டணியில் அதிமுக வே போட்டியிட இருக்கிறது. நாம் தமிழர் கட்சி மட்டும் வேட்பாளரை சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பு மரிய ஜெனிஃபர் என்பவரை அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்திருந்தாலும் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதைவிட பாரதிய ஜனதா கூட்டணியிலும் தொகுதி பங்கீடு முடியாமல் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு இறுதிச் செய்யப்படவில்லை. இதனால் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரும், அதிமுக வேட்பாளரும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலை தான் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நீடித்து வருகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்திருந்தாலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும், விளவங்கோடு சட்டசபை இடை தேர்தலுக்கும் வேட்பாளர்கள் யார் என தெரியாததால் அரசியல் கட்சிகளின் இன்னும் பிரச்சாரத்தை தொடங்காமல் மெளனமாக உள்ளனர்.