நாசரேத் தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலயத்தில் அசன விழா
நாசரேத் தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலயத்தில் அசன விழா நடைபெற்றது.;
Update: 2024-05-03 07:09 GMT
அசன விழா
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலயத்தில் நடந்த அசன விழா வில் திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய வளாகத்தில் அசன விழா நடந்தது. பங்கு த்தந்தை ததேயூஸ் ராஜன் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திரளான பேர்களுக்கு அசன விருந்து வழங்கப்பட்டன. முன்னதாக ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ததேயூஸ் மற்றும் அசன கமிட்டியார், விழா குழுவினர் மற்றும் தைலாபுரம் பங்கு மக்கள் செய்திருந்தனர்.