கச்சனாவிளை பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விழா
கச்சனாவிளை பரி.மாற்கு ஆலயத்தில் 84வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விழா நடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-27 15:41 GMT
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் சேகரம் கச்சனாவிளை பரி.மாற்கு ஆலய 84வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அசன பண்டிகை நிகழ்ச்சி நடந்தது. சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
விழாவில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சேகர தலைவர் நவராஜ், சபை ஊழியர் செல்வசிங் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.