ஆரா ஆனந்த கிருஷ்ணருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-03 08:35 GMT

சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகரில் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள கிருஷ்ணருக்கு அஷ்டமி தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ராதா, ருக்மணி, கிருஷ்ணர் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கிருஷ்ணர் பஜனை பாடல்களைப் பாடி, தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News