வாலிபர் மீது தாக்குதல்; ஒருவர் கைது
கழிவு நீர் கால்வாய் பிரச்சனையில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய நபரை திமிரி போலீசார் கைது செய்தனர்செய்தனர்;
Update: 2024-06-25 11:00 GMT
கழிவு நீர் கால்வாய் பிரச்சனையில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய நபரை திமிரி போலீசார் கைது செய்தனர்செய்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே உள்ள வரகூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் ஆறுமுகம் (34). இவரது வீட்டின் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் அதிகப்படியான நீர் நிரம்பி வெளியேறி சாலையில் சென்றுள்ளது. இதை பார்த்த அதே தெருவில் வசித்து வரும் பூபாலன் (54) என்பவர் ஆறுமுகத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கைகலப்பாக மாறி ஆறுமுகத்தை, பூபாலன் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். பின்னர் திமிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் பூபாலனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.