கிராம உதவியாளர் மனைவி மீது தாக்குதல் -கவுன்சிலர் உட்பட 6 பேருக்கு வலை

Update: 2023-12-08 08:02 GMT

வலை வீச்சு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வந்தவாசி அடுத்த தேசூரில் உள்ள கிராம உதவியாளர் மனைவியை சரமாரியாக தாக்கிய பேரூராட்சி பெண் கவுன்சிலர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் நகரைச் சேர்ந்தவர் அதியமான் .இவரது மனைவி சிலம்பியா ( 36). அதியமான் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சிலம்பியாவின் தங்கை கோமதியை அதே பகுதியை சேர்ந்த கபிலன் 26., என்பவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இதில் கோமதிக்கும் கபிலனுக்கும் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கபிலனின் சகோதரி தேசூர் பேரூராட்சி கவுன்சிலரான கவிதா  35., இவரது கணவர் ரத்தினம், சகோதரிகள் கல்பனா, உஷா உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2ந் தேதி சிலம்பியா வீட்டில் இருந்த போது அங்கு சென்று கவிதா உன் தங்கை நகை உன்னிடத்தில் தான் உள்ளது. அதை எங்களிடம் கொடுங்கள் என கேட்டுள்ளனர். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கவிதா குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் ஆபாசமாக பேசி சிலம்பியாவை சரமாரி தாக்கி உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்யாமல் விடமாட்டோம் என மிரட்டினார்களாம். இதில் காயமடைந்த சிலம்பியா சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து சிலம்பியா கொடுத்த புகாரின் பேரில் தேசூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாய்ராம் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பெண் கவுன்சிலர் கவிதா உள்ளிட்ட 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News