வரும் திங்கட்கிழமை சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு கூட்டம்
தஞ்சாவூரில் சட்டபேரவை அரசு உறுதிமொழிக்குழு கூட்டம் வருகின்ற 29ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு (2023-2024) தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு (2023-2024) தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் வருகின்ற (29.01.2024) திங்கட்கிழமை ஆய்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு வருகின்ற 29.01.2024 திங்கட்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளார்கள்.
இக்குழு தலைவர் தி.வேல்முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கா.அண்ணாதுரை இரா.அருள், இ.கருணாநிதி மு.சக்ரபாணி, மொ.பழனியாண்டி ரா.மணி, ரூபி.ஆர்.மனோகரன் எம்.கே.மோகன், பெ.ராமலிங்கம் அ.செ.வில்வநாதன், எஸ்.ஜெயகுமார் ஆகியோர் உறுப்பினர்களாகவும், செயலகம் முதன்மைச் செயலாளர் முனைவர் கி சீனிவாசன், இணைச் செயலாளர் மு கருணாநிதி, துணைச் செயலாளர் ஸ்ரீ. ரா. ரவி ஆகியோர் உள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொ
ழிக் குழு தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள உறுதிமொழிகளுள் நிறைவேற்றப்பட்டவை, பணிகள் நடைபெற்று வரும் என்பதை குறித்து குழு நேரில் சென்று பார்வையிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்டம் தொடர்புடைய உறுதி மொழிகள் ஆய்வு கூட்டம் நடைபெறும். இக்கூட்டமானது, அரசு தலைமை கொறடா, ,தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.