மன்னார்குடியில் சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம்
By : King 24X7 News (B)
Update: 2023-11-03 12:57 GMT
சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் இரண்டாவது நாள் கருத்தரங்கம் அரசு தலைமை கொறடா முனைவர் கோ.வி. செழியன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், மன்னார்குடி நகர் மன்ற தலைவர் சோழராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.