கடன் தொல்லையால் உதவி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவண்ணாமலையில் கடன் தொல்லையால் உதவி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-06 16:48 GMT

தற்கொலை 

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவராமன் (வயது 34) தனியார் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் வெளியில் குறைந்த வட்டிக்கு பணத்தை வாங்கி அதற்கு கூடுதல் வட்டி வைத்து வெளியே கொடுத்து வந்துள்ளார். பணத்தை திருப்பி கொடுக்காமல் சிலர் ஏமாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சிவராமனுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த நபர்கள் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்த சிவராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News