குறைந்தது குற்ற வழக்குகள்

நீலகிரியில் கடந்த 2022ம் ஆண்டை விட, 2023ல் 52 சதவீதம் குற்ற வழக்குகள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-01-01 09:55 GMT
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்தான காவல்துறையில் செய்தி குறிப்பு மாவட்ட காவல்துறை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 52% குற்ற வழக்குகள் குறைந்துள்ளதாகவும், 97 சதவீத வழக்குகள் கண்டுப்பிடிக்கப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை பொறுத்த அளவு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 19 சதவீத வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. இதில் 12 % குற்றங்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. சாலை விபத்தை பொறுத்த அளவு கடந்த ஆண்டைக் காட்டிலும் 2023 ஆம் ஆண்டில் 22 சதவீதம் வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு 19 கோடியே 26 லட்சத்து 66 ஆயிரத்தி 360 ரூபாய் அபராத தொகையாக வசூல் செய்யப்படுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News