ஆத்தூர் : நரசிங்கபுரம் நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார்.;

Update: 2024-02-21 15:47 GMT


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார்.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்டவைகளுக்குபொதுமக்கள் மனு அளித்திருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பு செய்வதாகவும் லஞ்சம் கேட்பதாகவும் நகர மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

இதன் எதிரொலியாக நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீன், நகர மன்ற தலைவர் அலெக்ஸாண்டர் மற்றும் நகராட்சி அலுவலர்கள்,அதிமுக திமுக உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விசாரணை மேற்கொண்டார்.

Advertisement

அப்போது மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நகராட்சி ஆணையாளர் மற்றும் அலுவலர்கள் எந்த பணிகளையும் மேற்கொள்வதில்லை.மக்களுடைய முதல்வர் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதும், நடவடிக்கை எடுப்பதில்லை. வரி வசூல் செய்தால் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.

என குற்றம் சாட்டினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நகராட்சி ஆணையாளரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டார்.மேலும் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார்

Tags:    

Similar News