ஆத்தூர் : விவசாய நிலத்தில் தீ விபத்து - பயிர்கள் எரிந்து சேதம்

ஆத்தூர் அருக விவசாய நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சோளத்தட்டு, வைக்கோல் போர், பாக்கு மரம், தென்னை மரம் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமானது.

Update: 2024-04-01 01:59 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரி பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன இந்நிலையில் அப்பகுதியில் ராமசாமி கொழுஞ்சிநாதன் ராஜேந்திரன் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் நான்கு ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலத்தில் சோளத்தட்டு வைக்கோல் போர் பாக்கு மரம் தென்னை மரம் உள்ளிட்ட மரங்களை வைத்து வளர்த்து வருகின்றனர் இந்நிலையில் விவசாய நிலத்தில் இருந்து புகைமூட்டம் கண்டதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்க்கும் போது திடீரென விவசாய நிலத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது .

உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கோடை வெயிலின் தாக்கம் என்பதால் அப்பகுதியில் தீ விவசாய நிலம் முழுவதும் நான்கு பகுதியிலிருந்தும் காற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் தீயை அடக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும்  முயற்சியில் போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News