ஆத்தூர் : தீ தொண்டு நாள் வார விழா

ஆத்தூர் தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு நாள் வார விழா முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் தீயணைப்புத் துறை சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு.

Update: 2024-04-15 07:29 GMT

தீத்தொண்டு நாள்

சேலம் மாவட்டம் ஆத்தூர்தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் தீத்தொண்டு நாள் வாரவிழா முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கினார்கள் இதில் சமையல் செய்து முடித்தவுடன் கேஸ் அடுப்பின் ரெகுலேட்டரை அணைத்து விடுங்கள், கேஸ் சிலிண்டர் எப்போதும் நிற்கும் நிலையில் வைத்து பயன்படுத்த வேண்டும், பள்ளி நடக்கும் போதே நுழைவாயில் கதவுகள் மற்றும் அவசர வழி கதவுகளை திறந்து வையுங்கள், மாணவ மாணவிகளுக்கு தீ விபத்தின் போது வெளியேறுதல் பயிற்சி மற்றும் தீத்தடுப்பு விழிப்புணர் வகுப்பு மாதம் ஒருமுறை நடத்துங்கள், வணிக வளாகங்களில் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதை உறுதி செய்ய ஆறு மாதத்திற்கு ஒரு வெளியேற்றம் பயிற்சி மற்றும் போலி ஒத்திகை பயிற்சி மேற்கொள்ள வேண்டும், மின்சார தீ விபத்து ஏற்படாமல் இருக்க தரமான மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்ற துண்டு பிரசுரத்தை வழங்கி தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Tags:    

Similar News