ஆத்தூர்: அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீ தடுப்பு ஒத்திகை
ஆத்தூரில் தீயணைப்பு துறை சார்பில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒத்திகை மூலம் தீ தடுப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
Update: 2024-04-14 04:34 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஆத்தூர் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.தீ தடுப்பு முறை குறித்தும் அவற்றை கையாளும் முறை குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர் மேலும் விபத்து நடக்கும் போது காப்பாற்றும் முறை குறித்தும் தீயை அணைப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் போக்குவரத்து கழக பணிமனை ஊழியர்கள், தீயணைப்பு துறை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.