ஆத்தூர்: தீ தடுப்பு போலி ஒத்திகை ஒத்திகை

ஆத்தூர் அருகே கொத்தம்பாடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடந்தது.

Update: 2024-05-08 15:05 GMT

ஆத்தூர் அருகே கொத்தம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வளாகத்தில்  போலி ஒத்திகை பயிற்சியின் மூலம் செயற்கையாக, தீயை உருவாக்கி, அதை பாதுகாப்பாக அணைப்பது குறித்தும் , மருத்துவமனை வார்டு பகுதியில்  காஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் விளக்கினர்.

தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் செயல் விளக்கத்துடன் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த போலி ஒத்திகை நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் பங்கேற்று தீ தடுப்பு  முறைகளை செய்து பார்த்தனர் . அவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது

Tags:    

Similar News