ஆத்தூர்: வட்டாரப் போக்குவரத்துதுறை சார்பில் சிறப்பு சோதனை
ஆத்தூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ரகுபதி தலைமையில் போக்குவரத்து துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் .உத்தரவின் படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆத்தூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ரகுபதி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் சிறப்பு சோதனை செய்தனர். அதே போன்று ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை வரி செலுத்தப்படாமல் இயக்கப்பட்ட ஒரு JCB வாகனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆத்தூரில் நிறுத்தப்பட்டுள்ளது. மற்றொரு JCB வாகனம் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட அவ்வாகனத்திற்க்கு சாலை வரி வசூல் செய்யப்பட்டது.
இச்சிறப்பு சோதனைகள் மூலம் பள்ளி வாகனத்தின் நிலுவையில் உள்ள சாலை வரி மற்றும் இணைக்க கட்டணமாக 2 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இது போன்று சிறப்பு வாகன தணிக்கை ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், தம்மம்பட்டி, போன்ற பகுதிகளில் அடிக்கடி சோதனைகள் நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ரகுபதி தெரிவித்துள்ளார்.