ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் கோவில் திருவிழா - பக்கதர்கள் நேர்த்திக்கடன்
ஆத்தூர் அருகே விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவில் 39 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Update: 2024-05-21 14:12 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விநாயகபுரம் சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவிலில் 39 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா, இன்று அலகு குத்தும் நிகழ்ச்சியில் ராட்சத கிரேன் மற்றும் லாரிகளில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான முறையில்விமான அளவு கத்தி அளவு கம்பி அளவு நாக்கு அளவு உள்ளிட்ட பல்வேறு அளவுகளும்,50க்கும் மேற்பட்ட பெண்கள் அக்கினி சட்டி ஏந்தியும் விநாயகபுரம் சந்தப்பேட்டையில் தொடங்கி உடையார்பாளையம் சாரதா ரவுண்டானா காந்திநகர் பூங்கா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை சென்று அடைந்தது. இதில் விநாயகபுரம் மட்டும் இன்றி நரசிங்கபுரம் உடையார்பாளையம் தெற்கு காடு நேதாஜி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.