ATM-ஐ உடைத்து கொள்ளை முயற்சி செய்த வாலிபர் கைது
வேடசந்தூரில் ATM-ஐ உடைத்து கொள்ளை முயற்சி செய்த வாலிபர் கைது;

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுரை ரோட்டில் உள்ள பழைய சாந்தி தியேட்டரில் இசாப் வங்கி என தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மர்ம நபர் ஏடிஎம் எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட செங்குறிச்சியை சேர்ந்த பெருமாள் மகன் கொடிக்கூத்தன்(25) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.