பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் - சிசிடிவியில் சிக்கிய இளைஞர்கள்

சீர்காழியில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துனரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-15 05:52 GMT

சிசிடிவி காட்சி 

சீர்காழி ஆர் கே எஸ் கனகராஜ் ட்ரான்ஸ்போர்ட்டில் நடத்துனராக பணிபுரிபவர் வீரமணிகண்டன் இவர் நேற்று இரவு மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரத்திற்கு பேருந்தில் நடத்துனர் பணி மேற்கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் மர்ம நபர்கள் பேருந்தை வழி மறைத்து பேருந்தில் பணியில் இருந்த வீரமணிகண்டனை பேருந்தில் இருந்து இழுத்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கும் காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நடத்துனர் வீர மணிகண்டன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார் பேருந்தில் இருந்த சிசிடிவி கட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செம்மங்குடியைச் சேர்ந்த மாதவன் மற்றும் பெயர் தெரியாத மூன்று பேர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மது போதையில் பேருந்தில் ஏறி பாடல்கள் மாற்ற கூறியபோது நடத்துனருக்கும் அவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து நடத்துனர் அவர்களை பாதியில் கீழே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த முன் விரோதம் காரணமாக கீழே இறங்கிய நபர் அவரது நண்பர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது இதனை அடுத்து சீர்காழி போலீசார் சிசிடிவி கட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை சீர்காழி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News