கார் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

சேலத்தில் கான் டிரைவரை தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்‌;

Update: 2024-05-31 15:20 GMT

கைது

சேலம் அழகாபுரம் நரசோதிப்பட்டி தெய்வானை நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 36). இவர் அஸ்தம்பட்டி சாரதா கல்லூரி சாலையில் உள்ள சீத்தாராமன் அவென்யூவில் வசிக்கும் பிரசாந்த் என்பவருக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 28-ந் தேதி இரவு 11 மணியளவில் பிரசாந்த் வீட்டின் முன்பு டிரைவர் வெங்கடேஸ்வரன், தான் ஓட்டி வந்த காரை நிறுத்தினார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதனை வெங்கடேஸ்வரன் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தனது நண்பர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு வரழைத்துள்ளார். இதையடுத்து 3 பேர் சேர்ந்து வெங்கடேஸ்வரனை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த வெங்கடேஸ்வரன் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் வெங்கடேஸ்வரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அஸ்தம்பட்டி காந்தி ரோட்டை சேர்ந்த அருண்குமார் (31), அவரது நண்பர்களான பெரமனூர் நாராயண பிள்ளை தெருவை சேர்ந்த பிரகாஷ் (28), சின்னப்புதூரை சேர்ந்த சந்தோஷ் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News