சொத்து பிரச்சனையில் வக்கீல்கள் மீது தாக்குதல்...,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சொத்து பிரச்சனையில் வக்கீல்கள் மீது தாக்குதல்..., திமுக முன்னாள் நிர்வாகி உட்பட 5 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Update: 2024-06-21 04:56 GMT

காவல்துறை விசாரணை


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சொத்து பிரச்சனை தொடர்பாக இரண்டு வக்கீல்கள் மீது சூரி கத்தியினால் தாக்குதல் நடத்திய திமுக முன்னாள் நிர்வாகி உட்பட 5 பேரை கைது செய்த நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் மகேஸ்வரன் இவரிடம் ரேவதி என்ற பெண் ஜூனியராக பணிபுரிந்து வருகிறார். ரேவதிக்கும் நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த முன்னாள் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயபிரகாசம் என்பவருக்கும் ஐந்து கோடி ரூபாய் சொத்து மதிப்பு சம்பந்தமாக பிரச்சனைகள் மற்றும் வழக்குகள் இருந்து வந்த நிலையில் ரேவதியின் பெரியம்மா கோசலை எஸ்.எம்.டி நகரில் உள்ள ரேவதியின் வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த வாரம் இறந்து விடுகிறார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக கோசலையின் அண்ணன் கிருஷ்ணசாமி என்பவரின் மகனான நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் தனது அத்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நகர் காவல் நிலையத்தில் நடத்துவதற்காக இரு தரப்பிற்கும் மனு அனுப்பப்பட்டு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர்கள் ரேவதி மற்றும் அவரது சீனியர் வழக்கறிஞர் மகேஸ்வரன் காவல் நிலையத்தில் ஆஜராகிய போது எதிர் தரப்பை சேர்ந்த ஜெயபிரகாசம் வர தாமதம் ஆனதால் காவல் நிலையம் எதிரே உள்ள மகேஸ்வரன், ரேவதி வழக்கறிஞர் அலுவலகத்தில் நாங்கள் இருப்பதாகவும் எதிர் தரப்பினர் வந்தவுடன் தங்களை அழைக்க சொல்லிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் ரேவதியின் சீனியர் வக்கீலான மகேஸ்வரன் என்பவரது அலுவலகத்திற்க்குள் சூரி கத்தியுடன் வந்த ஜெயபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாகளான பாலாஜி, செளந்திரராஜன், ராஜாலிங்கம்,அருண் ஆகியோர் வந்த நிலையில் அங்கு வைத்து இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஜெயபிரகாஷ் கூர்மையான ஆயுதங்கள் மூலம் ரேவதி மற்றும் மகேஸ்வரனை தாக்கியதாக கூறப்படுகிறது. காவல் நிலையம் எதிரே இச்சம்பவம் நடைபெற்றதால் காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்தனர். தாக்குதலில் காயம் அடைந்த வழக்கறிஞர்கள் ரேவதி மற்றும் மகேஸ்வரன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ரேவதி மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனியர் வழக்கறிஞர் மகேஸ்வரன் சிறுகாயங்கள் ஏற்பட்டதில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 2 வக்கீல்களை தாக்கியதாக முன்னாள் திமுக நிர்வாகி ஜெய்பிரகாஷ் மற்றும் பாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த நகர் காவல்துறையினர் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக கோசலை என்பவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் சொத்து இருப்பதாகவும் இந்த சொத்தை பிரிப்பதில் தான் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பு ஆனதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News