அலுவலகம் மீது தாக்குதல் - சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து புரசைவாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-17 04:14 GMT

ஆர்ப்பாட்டம் 

ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்டது. இந்நிலையில், தாக்குதல் நடத்திய ஜாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசையும் காவல்துறையையும் வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புரசைவாக்கம் வெள்ளாளத்தெரு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News