திண்டுக்கல் அருகே வன்னிய கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்
திண்டுக்கல் அருகே வன்னிய கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அந்த சங்கத்தினர் கண்டம் தெரிவித்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-23 11:09 GMT
கோப்பு படம்
திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில் அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால் தனது ஆதரவாளர்களுடன் கிறிஸ்தவ வன்னிய மக்களை வீடு புகுந்து தாக்கியுள்ளார். இது சமூக வலைதளங்கள், செய்திகள் மூலம் அறிந்தோம்.
இந்த நிகழ்வை கிறிஸ்தவ வன்னிய இளைஞர் சங்கமானது வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை எந்தவித பாரபட்சமும்,
இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னிய கிறிஸ்தவ இளைஞர் சங்கத் தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி கண்டனம் தெரிவித்துள்ளார்.