விஏஓ மீது தாக்குதல்: முற்றுகை போராட்டம்
By : King 24X7 News (B)
Update: 2023-11-20 13:27 GMT
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே பூவாளி குரூப் கிராம நிர்வாக அலுவலர் சேகர் மற்றும் தலையாரி சபிதா ஆகிய இருவரும் ஏனாபுரத்தில் அனுமதியின்றி கிராவல் மண் அல்லியதை தட்டி கேட்ட நிலையில் பூவாளியைச் சேர்ந்த பிரபாகரன், கோவானூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உட்பட நான்கு பேர் அவரை பணி செய்ய விடாமல் தாக்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விஏஓக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்