திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-07-01 16:07 GMT

தற்கொலைக்கு முயன்றவர்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமரேசன் (55). கொத்தனாரக வேலை பார்த்து வருகிறார். அப்பகுதியில் 25 வருடங்களாக குடியிருந்து வருகிறார்.

இவர் குடியிருக்கும் வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் போலி பட்டா சான்றிதழ் வாங்கி அபகரித்ததாக கூறி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர். இது குறித்து குமரேசன் தெரிவித்ததாவது: அம்பாத்துரை கிழக்குத் தெருவில் குடிந்துயிருந்து வரும் எனது வீட்டை மற்றொருவர் போலி பட்டா மூலம் வீட்டு அபகரிக்க முயல்கிறார். இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை,

ஆதலால் மன அழுத்தத்தில் இருந்த நாள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என தெரிவித்தார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பாக பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News