தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-18 13:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் நாபெட் நிறுவனம் கொப்பரை தேங்காய் விலை கிலோ 108 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்து வைத்துள்ளது. கொள்முதல் செய்து வைத்துள்ள கொப்பரைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை எண்ணெய் நிறுவனங்கள் பயன்படுத்தி குறைவான விலைக்கு கொள்முதல் செய்யும் பட்சத்தில் விவசாயிகள் வெளிசந்தையில் விற்க்கப்படும் போது  கொப்பரை தேங்காயின் விலையும் குறையும் வாய்ப்புள்ளது. 

எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு கொள்முதல் செய்துள்ள கொப்பரை தேங்காய்களை எண்ணையாக மாற்றி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ,

அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News