அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு போராட்டம்

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-29 12:02 GMT

கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 ஆர்ப்பாட்டத்தில் தென்னை, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட, கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழித்திட, மற்றும் தென்னை, பனை, மரங்களில் கள் இறக்கி விற்க அனுமதிக்க கோறியும், கொப்பரை தேங்காய்க்கு விலை இல்லாத காரணத்தினால் அரசு நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கிட கோரியும் கோஷமிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமையில் களஞ்சியம் விவசாயிகள் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் கிராமிய மக்கள் இயக்கத் தலைவர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் ஒன்றிய தலைவர் வேலுச்சாமி ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட தலைவர் மாணிக்கராஜ்  உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News