தமிழ் மாநில விவசாய கோரிக்கையை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.;

Update: 2024-01-24 14:31 GMT


தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.


தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசு வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் தனராஜ், மாவட்ட பொருளாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் கல்யாணி, மாவட்ட துணை தலைவர்கள் அழகேசன், கல்பனா மாவட்ட துணை செயலாளர்கள் பூமாலை, பொன் கொடி மாவட்ட குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பயனற்ற உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட வேண்டும், கலைஞர் வழங்கிய விவசாய தொழிலாளர் நல வாரியத்தை அமைத்திட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கு கொடுக்கவேண்டிய பாக்கித்தொகையை, உடனடியாக கொடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு முன்வைத்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Advertisement

தொடர்ந்து மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் ஜெயராமன், முன்னாள் மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இந்த நிகழ்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் ராமராஜ், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, வேப்பூர் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News