மன்னார்குடியில் வரும் ஜனவரி 18ஆம் தேதி ஏலம்
திருவாரூர் மாவட்டம், மன்னை ராஜகோபாலசாமி அரசு கலை கல்லூரியில் மரங்களை அகற்றுவதற்கான விற்பனை ஏலம் ஜனவரி 18ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
Update: 2024-01-13 06:45 GMT
மன்னார்குடியில் ஏலம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை ராஜகோபாலசாமி அரசு கலை கல்லூரியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ஏதுவாக 102 மரங்களை அகற்றுவதற்கு அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கான விற்பனை ஏலம் வரும் ஜனவரி 18ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார் .