இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து - அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு
Update: 2023-11-01 01:15 GMT
விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற பொலிரோ சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் இருசக்கர வாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த மாநகரப் பேருந்து ஓட்டுநர் விஜி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.