குமரியில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு: 3வாலிபர்கள் மீது வழக்கு
குமரியில் ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் அய்யா கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (27). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் தனது ஆட்டோவில் கன்னியாகுமரியில் நான்கு வழி சாலை முடியும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கன்னியாகுமரி சுனாமி காலனி மற்றும் புதுக்கிராமம் பகுதியை சேர்ந்த ஜித்து (21), அபிஷேக் (21), ஆகாஷ் (22) ஆகிய மூன்று பேரும் குடிபோதையில் அருண்குமார் ஆட்டோவை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த மூன்று பேரும் ஆட்டோ டிரைவர் அருண்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அருண்குமார் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஜித்து, அபிஷேக், ஆகாஷ் ஆகிய மூன்று வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.