மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தானியங்கி கருவி பொருத்தம்

பெருந்துறை அருகே பொன்முடி ஊராட்சியில் தானியங்கி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தானியங்கி கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Update: 2024-01-24 10:25 GMT

தானியங்கி கருவி 

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வழிகாட்டுதலின்படி, பெருந்துறை அருகேயுள்ள பொன்முடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், தானியங்கி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தானியங்கி நீர் விநியோக கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் சேகரிக்கப்படும் நீரானது தொட்டியிலிருந்து நிரம்பி வீணாவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடியிருப்புக்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தேவையான அளவிற்கு குடிநீர் விநியோகம் சீரான அளவில் நடைபெற்று வருகிறது. குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரங்களில் ஏதேனும் நேரம் மாற்றம் இருப்பின் வாட்ஸ் ஆப் செயலி (WhatsApp) குரூப் மூலம் அனைவருக்கும் முன்கூட்டியே தகவல் அளிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரத்தை முன்கூட்டியே அறிவதன் மூலம் பொது மக்கள் சிரமமின்றி தங்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக் கொள்கின்றனர். பொன்முடி ஊராட்சிக்கு சராசரியாக மாதம் ரூ.56,000/- ஊராட்சி பொதுநிதி சேமிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் தானியங்கி நீர் விநியோக கட்டுப்பாட்டுக் கருவிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்தல் திட்டம் மேற்கொள்வதற்காக நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட 87 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான செயல்விளக்க கூட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News