மதுரை விமான நிலையத்தில் வாகனங்களுக்கு தானியங்கி கட்டண சேவை தொடக்கம்

மதுரை விமான நிலையத்தில் நாளை மறுதினம் ( 29ம் தேதி) முதல் வாகனங்களுக்கு தானியங்கி கட்டண சேவை திட்டம் அறிமுகமாகிறது.

Update: 2024-05-27 10:02 GMT

மதுரை விமான நிலையத்தில் நாளை மறுதினம் ( 29ம் தேதி) முதல் வாகனங்களுக்கு தானியங்கி கட்டண சேவை திட்டம் அறிமுகமாகிறது.

மதுரை விமான நிலையத்தில் 29ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு தானியங்கி கட்டண சேவை தொடக்கம் மதுரை விமான நிலையத்தில் தானியங்கி வாகன நிறுத்தப்பட்டு கார், இருசக்க வாகனங்களுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை விமான நிலையத்தில் தனியாங்கி வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த வாரத்தில் இருந்து பயன்பாட்டுக்கு வரும்.

இந்த திட்டத்தில் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாடகை கார்களுக்கு ( ஏ.ஏ.ஐ. உரிமம் வழங்கிய வாகனங்கள்) அரை மணி நேரத்துக்கு ரூ. 20, அரை மணி நேரத்திற்கு மேல் ஒன்றரை மணி நேரம் வரை ரூ. 35, தனியார் கார்களுக்கு( 7 சீட் வரையுள்ள) அரை மணி நேரம் ரூ. 30, அரை மணி நேரத்திற்கு மேல் ஒன்றரை மணி நேரம் வரை ரூ. 40, டெம்போ மற்றும் மினி பேருந்துகள்( 7 இருக்கைக்கு மேல்) அரை மணி நேரம் வரை ரூ.60,அரை மணி நேரத்திற்கு மேல் ஒன்றரை மணி நேரம் ரூ. 80, வணிக வாகனங்களுக்கு ( ஏ.ஏ.ஐ. அங்கீகரிக்காத வாகனங்கள்) அரை மணி நேரம் வரை ரூ. 108, அதன் பிறகு ஒன்றரை மணி நேரம் வரை ரூ. 158, பஸ்கள், டிரக்குகளுக்கு அரை மணி நேரம் வரை ரூ. 170, அரை மணி நேரத்திற்கு மேல் ஒன்றரை மணி நேரம் வரை ரூ. 250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், இருசக்கர வாகனங்களுக்கு அரை மணி நேரத்திற்கு ரூ. 10, அதன் பிறகு ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு ரூ. 15 கட்டணமாக வசூலிக்கப்படும். முதல் 2 மணி நேரத்திற்கு பிறகு நான்கு சக்கர வாகனங்களுக்குஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 10-ம், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். காரை 7 மணி முதல் 24 மணி நேரத்திற்கு 300 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 

பயணிகளை அழைத்து செல்ல வரும் வாகனங்களுக்கான கட்டணத்தை பொறுத்தவரையில், 12 நிமிடம் 10 விநாடிக்கு( விமான நிலையம் நுழைந்து வெளியேறும் வரை) கட்டணம் இல்லை. 12 நிமிடம் 10 விநாடியை தாண்டினால், தனியார் காருக்கு ரூ. 30, இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படும். வணிக வாடனை வாகனங்களுக்கு 2 நிமிடம் 30 வினாடிகள் வரை கட்டணம் இல்லை. இந்த நேரத்தை தாண்டினால், வாடகை கார்களுக்கு 108, பஸ், டிரக்குகளுக்கு ரூ. 170, டெம்போ, மினி பஸ்களுக்கு ரூ. 60 கட்டணம் வசூலிக்கப்படும். பிற வணிக வாகனங்களில் காருக்கு ரூ. 135, பஸ், டிரக்குகளுக்கு ரூ. 211, டெம்போ, மினி பஸ்களுக்கு ரூ. 75 கட்டணமாக வசூலிக்கப்படும்.

 மாத கட்டண முறையும் உண்டு. அதில் விமான நிலைய ஊழியர்களின் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை. சரக்கு பிரிவுக்கான டெம்போவுக்கு ரூ. 2 ஆயிரம், டிரக்குகளுக்கு ரூ. 3 ஆயிரம், பிற கார்களுக்கு ரூ. 500, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 250, விமான நிலைய சரக்கு பிரிவை சேர்ந்த உரிமதாரர்கள், முகவர்களின் வாகனங்களுக்கு ரூ. 1500 கட்டணமாக வசூலிக்கப்படும். இதுபோல், விமான நிலைய வளாகத்தில் உள்ள நடமாடும் ஏ.டி.எம். எந்திர வாகனம், அரசு வாகனங்களுக்கு கட்டணம் இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News