கெங்கவல்லி முருகன் கோயிலில் விருது வழங்கும் விழா

கெங்கவல்லி முருகன் கோயிலில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-01-09 03:06 GMT
விருது வழங்கல் 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி முருகன் கோயில் ஆறுபடை இப்பேரவையின் 41-ஆவது ஆண்டு விழாவையொட்டி, கோயில் சுவாமி திருக்கல்யாணம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தைத் தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டன.அதில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளாருக்கு ஆன்மிக ஆசான் விருது வழங்கப்பட்டது. அதை சித்தர் பீட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

அத்துடன் குருமகா சன்னிதானம் துறையூர் ஆதினம், இதுவரை 25 கோடி பேருக்கு அன்னதானம் வழங்கிய துறையூர் ஓங்காரக்குடில் அகத்தியர் சன்மார்க்க சங்க நிறுவனர் அரங்க மகாதேசிகர், ரத்தினகிரி பாலமுருகர் அடிமை சுவாமிகள் ஆகியோருக்கு ஆன்மிக ஆசான் விருதுகள் வழங்கப்பட்டன.

அதுபோல பழனி சித்தனாதன் உரிமையாளர் சிவநேசன், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.டி. என் சக்திவேல் ஆகியோருக்கு 'ஆன்மிக சேவை செம்மல்' விருதுகள் வழங்கப்பட்டன.

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற துணைவேந்தர் பொ.குழந்தைவேலுவுக்கு கல்வி சேவை செம்மல்' விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறுபடை பக்தர்கள் பேரவை செய்திருந்தது.

Tags:    

Similar News