சேலம் மருத்துவ சங்க கிளைக்கு சிறந்த சேவைக்கான விருது
தேசிய அளவிலான மாநாட்டில் சேலம் மருத்துவ சங்க கிளைக்கு சிறந்த சேவைக்கான விருது
By : King 24x7 Website
Update: 2023-12-31 13:27 GMT
கேரள மாநிலம் கோவளத்தில் தேசிய மருத்துவ மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் இந்திய மருத்துவ சங்க சேலம் கிளைக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தேசிய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சரத்குமார் அகர்வால், தேசிய செயலாளர் டாக்டர் அனில்குமார் நாயக், தேசிய தலைவர் (தேர்வு) டாக்டர் அசோகன் ஆகியோர் வழங்கினர். மேலும் சேலம் கிளையின் மூத்த மருத்துவர் டாக்டர் கே.பிரகாசம், சேலம் கிளை மருத்துவ சங்க செயலாளர் சிவசங்கர் ஆகியோருக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் டாக்டர்கள் ரங்கநாதன், மன்னார் மன்னன், சுந்தரவேல் மற்றும் ஜெயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.