கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
Update: 2023-12-12 07:28 GMT
பரிசளிப்பு
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மழலையர் தொடக்க பள்ளியில் நேற்று மாலை கவிதை போட்டி நடைபெற்றது.இந்த விழாவுக்கு ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்து கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.