திராவிட மாடல் ஆட்சி நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
கலசபாக்கம் மேற்கு ஒன்றியத்தில் திராவிட மாடல் ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள் குறித்து பொது மக்கள் முலம் தெரிந்து கொள்தவற்கான படிவத்தை பொது மக்களுக்கு பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நேற்று திராவிட மாடல் ஆட்சியில் செய்த நன்மைகள் பற்றி பொது மக்கள் எந்தவிதமான நலத்திட்டங்கள் பெற்றுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ படிவத்தை வழங்கினர். அப்போது பேசியதாவது கலசபாக்கம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளுக்கும் திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் என்னென்ன திட்டங்களால் ஒவ்வொரு குடும்பங்களும் பயன் அடைந்துள்ளது ,என்றும் மக்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கு என்னென்ன திட்டங்கள் வேண்டும் என்றும் தெரிந்து கொள்வதற்காக ,ஒவ்வொரு குடும்பத்தின் முலமாக கணக்கெடுத்து அந்த குடும்பத்தில் திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச பேருந்து பயணம், பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கு மாதந்தோறும் ரூ 1000, கலைஞரின் மகளிர் உரிமை தொகை மூலம் குடும்பத் தலைவிக்கு ரூ 1000 வழங்கப்படுகிறது.
அதே போல் விவசாய கடன் தள்ளுபடி, மகளிர்சுய உதவி குழு மூலம் வழங்கப்படும் கடன் உதவி, இது அனைவருக்கும் சரியான முறையில் சென்றடைகிறதா என்பதையும் தெரிந்து கொள்வதற்காக , ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு அறிவித்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது .அதன் மூலம் பயன் பெற்ற குடும்பங்கள் எண்ணிக்கை மற்றும் தமிழக அரசின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதில் எத்தனை பயனாளிகள் சரியான முறையில் பயன்படுத்துகிறார்கள் .
மேலும் பொது மக்களுக்கு என்னென்ன சலுகைகள் இன்னும் தேவை ,அவர்களுக்கு தேவையான திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக, இந்த திராவிட மாடல் ஆட்சியில் செய்த நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த படிவத்தின் மூலம் மக்கள் தங்கள் கோரிக்கையும் திராவிட மாடல் ஆட்சியில் பயன்பெற்ற திட்டங்கள் பற்றியும் கூறுவதற்காக இந்த படிவத்தை வழங்கியுள்ளார். இந்த படிவத்தின் மூலம் நீங்கள் பயன்பெற்ற திட்டங்களை பற்றி தெளிவான முறையில் கூறுவதற்காக இந்த படிவம் வழங்கி வருகிறோம் என்று பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் க.சுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி முருகையன், மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியன், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, ஒன்றிய கவுன்சிலர்கள் சென்னன். தணிகைமலை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன்குமார். ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.