மின்னணு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

ராணிப்பேட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப் பதிவு செய்யும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-12-16 06:40 GMT

ராணிப்பேட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப் பதிவு செய்யும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.   

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து வட்டாட்சியர் அலுவலங்களுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் எதிர் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 2024, வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் செயல் முறை விளக்கம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. 

இதற்காக ஆற்காடு நகராட்சி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அரக்கோணம்,  ராணிப்பேட்டை,  சோளிங்கர், ஆற்காடு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி ஆட்சியர் வளர்மதி மற்றும் அனைத்து கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து, அனைத்து வட்டாட்சியர் அலுவலங்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

 இந்த இயந்திரங்கள் வரும் 18-ம் தேதி முதல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்படும். இதில், பொதுமக்கள் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு செய்து தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்துக்கொள்ளலாம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேலாண்மை பொறுப்பு அலுவலர் சிவக்குமார், வருவகோட்டாட்சியர் மனோன்மணி, தேர்தல் வட்டாட்சியர் ஜெயக்குமார், அனைத்து கட்சி பிரமுகர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News