தேசிய நுகர்வோர் தினத்தில் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு
தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி;
By : King 24x7 Website
Update: 2023-12-22 17:37 GMT
தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை , சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ், அரசு கலைக் கல்லூரி இணைந்து நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் உணவு கலப்படம் குறித்த கண்காட்சி சேலம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நுகர்வோர் குடிமக்கள் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு வரவேற்றார். கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் பிரபாகரன் நுகர்வோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் கூறும் போது பொருட்கள் வாங்கும் போது அதன் காலாவதி தேதி பரிசோதித்து வாங்க வேண்டும் என்றார். மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்த கண்காட்சி மற்றும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் சுருளி விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் மனோகரன் நன்றி கூறினார்.