திருப்பத்தூரில் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூரில் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.;

Update: 2024-01-25 08:59 GMT

விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

திருப்பத்தூரில் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தூய நெஞ்சக் கல்லூரியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர். மேலும் மது போதையில் பயணம் செய்யக்கூடாது அதிவேகம் உயிருக்கு கேடு உள்ளிட்ட பதாகைகள் ஏந்தி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

மேலும் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற ஒட்டு வில்லையையும் வாகனத்தில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News