வாக்காளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு !

நத்தத்தில் வாக்காளிப்பதன் அவசியம் குறித்த கல்லூரி மாணவ - மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-04-06 09:10 GMT

வாக்காளர் விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவ - மாணவிகளின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு நத்தம் வட்டாட்சியர் சுகந்தி தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100 சதவீதம் வாக்களிப்பது, வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், ஜனநாயக் கடமையை தவறாது அனைவரும் ஆற்ற வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு பதாதைகளை கையிலேந்தியும், கோஷமிட்டும் சென்றனர் இந்த ஊர்வலம் அம்மன் குளம் தொடங்கி அவுட்டர் வழியாக நகர்ப்பகுதிகளில் சென்று யூனியன் அலுவலகம் வரை சென்றது. இதில் மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர பாண்டியன், தேர்தல் துணை வட்டாட்சியர் டேனியல் பிரேம் குமார், கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன் உள்ளிட்ட வருவாய் துறையினர்,கல்லூரி பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News