வாக்குப்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு.
திருப்பூர் வடக்கு தாலுக்காஅலுவலகத்தில் வாக்குப்பதிவு செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு;
By : King 24x7 Website
Update: 2023-12-23 16:45 GMT
திருப்பூர் வடக்கு தாலுக்கா அலுவலகத்தில் வாக்குப்பதிவு செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
வடக்கு தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. கல்லூரியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே தேர்தலை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் போன்றவற்றில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களது சந்தேகங்களை அதிகாரிகள் விளக்கமளித்து தெளிவுப்படுத்தினர்.