திமுக அரசின் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு

Update: 2023-12-11 05:18 GMT

நலத்திட்டங்கள் குறித்த தகவல் படிவம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் திராவிட மாடல் ஆட்சியில் செய்த நல திட்டங்கள் பற்றிய நன்மைகள் படிவத்தின் மூலம் பொதுமக்கள் எவ்வளவு நன்மைகள் பெற்றுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ படிவத்தை வழங்கி பேசுகையில் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு செய்த என்னென்ன திட்டங்களை அவை ஒவ்வொரு குடும்பங்களும் பெற்றுள்ளது.

மேலும் மக்களுக்கும் தங்களின் குடும்பத்திற்கு தேவையான திட்டங்கள் என்னென்ன வேண்டும் என்றும் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு குடும்ப வாரியாக கணக்கெடுத்து ,இந்த குடும்பத்தில் திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்பட்டு வரும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு மாதந்தோறும் ரூ1000, கலைஞரின் மகளிர் உரிமை தொகை மூலம் குடும்பத் தலைவிக்கு ரூ1000 வழங்கப்படுகிறது, அதே போல் விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு மூலம் வழங்கப்படும் கடன் உதவி, இது அனைவருக்கும் சரியான முறையில் சென்றடைகிறதா என்பதையும் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு அறிவித்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் மூலம் பயன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் தமிழக அரசின் மூலம் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டதில் எவ்வளவு பயனாளிகள் சரியான முறையில் பயன்படுத்துகிறார்கள். மேலும் பொது மக்களுக்கு என்னென்ன சலுகைகள் இன்னும் தேவை ,அவர்களுக்கு தேவையான திட்டங்கள் முமுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த திராவிட மாடல் ஆட்சியில் செய்த நல திட்டங்கள் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்‌ இந்த படிவத்தின் மூலம் மக்கள் தங்கள் கோரிக்கையும் திராவிட மாடல் ஆட்சியில் பயன்பெற்ற திட்டங்கள் பற்றியும் கூறுவதற்காக இந்த படிவத்தை வழங்கியுள்ளார். இந்த படிவத்தின் மூலம் நீங்கள் பயன்பெற்ற திட்டங்களை பற்றி தெளிவான முறையில் கூறுவதற்காக இந்த படிவம் வழங்கி வருகிறோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் பா.ராமஜெயம், வி.பி.அண்ணாமலை, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் குமார், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் திமுக கிளை நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News