100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலுான் பறக்கவிட்டு விழிப்புணர்வு...

சுங்குவார்சத்திரத்தில், லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பொதுமக்களிடம் விழிப்புணர்வு நடந்தது.

Update: 2024-04-08 04:11 GMT

விழிப்புணர்வு

காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி, வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்குதல், பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் அமைத்தல், மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்ப்பு, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, ராட்சத பலுான் பறக்கவிடுதல் என, பல முறைகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பு அருகே, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். இதில், 100க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண் மற்றும் தனியார் கல்லுாரி மாணவர்கள் ஒன்றிணைந்து, 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாம் ஓட்டளிக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் பெற கூடாது, ஒட்டளிப்பது நம் ஜனநாயக கடமை உள்ளிட்டவையை வலியுறுத்தி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர், 100 சதவீத ஒட்டளிக்க வலியுறுத்தி ராட்சத பலுானை, கலெக்டர் கலைச்செல்வி பறக்கவிட்டார். தொடர்ந்து, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்."

Tags:    

Similar News