இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு

கடலூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-06-27 09:17 GMT

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு 

கிருஷ்ணசுவாமி வித்யா நிகேதன் சிபிஎஸ்இ பள்ளியில் கடலூரில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் எலிசபெத் ஜோசப் தலைமை தாங்கினார்.ரொமிலா வின்சன் வரவேற்புரை உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக கடலூர் கிளை இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர்டாக்டர் வினோத் மற்றும் பொருளாளர், டாக்டர். வெங்கட்ரமணன் ஆகியோர் பங்கேற்று போதைப் பொருள் பயன்பட்டால் ஏற்படும் தீங்கு மற்றும் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கையில் குறித்து விழிப்புணர் நாடகத்தையும் அதோடு போதை பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழியும் மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.

போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு தெரிய வந்தால் உடனடியாக காவல்துறை மற்றும் பெற்றோர் ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மாணவி கவிநாரயணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News