வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி!
திருவண்ணாமலையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
Update: 2024-04-05 10:32 GMT
திருவண்ணாமலையில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து நகரின் முக்கிய வீதியான மாடவீதி, காந்தி சிலை, மத்திய பேருந்து நிலையம், அண்ணா நுழைவாயில் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.