எருமப்பட்டி அருகே விழிப்புணர்வு கூட்டம்

பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து எருமப்பட்டி அருகே விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-12 14:51 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

எருமப்பட்டி அருகே உள்ள காவக்கார பட்டி ஊராட்சி காவக்கார பட்டி விராலிப்பட்டி அரளிப்பள்ளம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடது இன்றலுக்கு வாய்ப்புள்ள மாணவர்களின் குடியிருப்பு பகுதிகளில் கள ஆய்வும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கள ஆய்வு மற்றும் பெற்றோர்களுக்கான கூட்டத்தில் வட்டார பள்ளி செல்லாகுழந்தைகள் கண்காணிப்பு குழுவின் சார்பில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தொடக்க நிலை குமார் எருமைப்பட்டி வட்டார கல்வி அலுவலர் அருண் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவக்குமார் வட்டாரப்பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி ஆசிரியர் பயிற்றுநர் கற்பகம் உள்ளிட்டோர் இடைநிற்றல் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவர்களை கள ஆய்வு செய்து மீண்டும் மாணவர்களை பள்ளிக்கு வருகை தர உரிய அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் காவல்காரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்களுக்கான கூட்டத்திலும் இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வருகை தர அறிவுரை வழங்கப்பட்டது இக்கூட்டத்தில் காவக்கார பற்றி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் துணைத்தலைவர் வீரமலை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்

Tags:    

Similar News